இயற்கையாகவே தங்கள் வீட்டிலே இயற்கை தோட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்தமை
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) உதவும் கரங்கள் ஊடாக இன்று 13.03.2022 கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச சபையும், இணைந்து மிகுந்த சிறப்பான ஒரு திட்டத்தை செய்வதற்கு இறைவன் நமக்கு உதவி செய்தார். அத்திட்டமானது இன்று இலங்கை முழுவதிலும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், இயற்கையாகவே தங்கள் வீட்டிலே இயற்கை தோட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளோம்.
இதன் மூலமாக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் உணவு நெருக்கடியை அவர்களால் தீர்த்துக்கொள்ள, இது ஒரு வழியாக அமையும் என்பது எமது பாரிய நம்பிக்கையாகவும் உள்ளது . இவ்வேலை திட்டமானது இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதற்கு கடவுள் எப்போதும் துணை செய்ய வேண்டும் என்பதோடு, உங்கள் கரங்களையும் எங்களோடு இணைத்து பயணிக்க அன்புடன் உங்களையும் நாங்கள் அழைக்கின்றோம்.