நீலாவணை பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கியமை
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) வாழ்வாதார உதவித்திட்டத்தினால், தனிப்பட்ட மனிதர்களின் குடும்பவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், நீலாவணை பிரதேசத்தை சேர்ந்த சகோதரன் சந்திரகுமார் அவர்களுக்கு, வீட்டுத் தோட்டம் செய்வதற்கான உபகரணங்களை இந்த நாளில் வழங்கி உள்ளது. இந்த காலகட்டங்களில் இலங்கை முழுவதும் உணவின் பற்றாக்குறையை அறிந்து கொண்ட எமது தேவ மகிமை ஊழியங்கள் (GOGM) வீட்டு தோட்டங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் கடவுளை பிரார்த்திப்போம்.