தம்பட்டை பகுதியில் பெண்களுக்கான மகாநாடு நடைபெற்றது
கர்த்தருடைய மகத்துவமான கிருபையினால் தேவ மகிமை ஊழியத்தின் ஊடாக தேவன் பெரிதானதும், நன்மையானதுமான காரியங்களை இந்தநாட்களில் இலங்கையில் செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் கடந்த 09.04.2022 அன்று தம்பட்டை பகுதியில் பெண்களுக்கான மகாநாடு ஒன்றை கர்த்தர் நடத்துவதற்கு கிருபை செய்தார். இந்த வகையிலே அனேக பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவன் செய்த மகத்துவங்களை அறிவித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இன்னும் தேவனுக்காக தொடர்ந்து செயலாற்றவும், தங்களை ஒப்புக்கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 16.04.2022 அன்று தம்பட்டை பகுதியில் வாலிபர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற்றது. “நீ தேவனுடைய தரிசனம் உள்ள வாலிபனா”? என்னும் தலைப்பில். வாலிபர்களை தரிசனம் உள்ள வாலிபர்களாகவும், ஆண்டவர் அவருக்காக பயன்படும் நபர்களாகவும் மாற்றினார். 12டிற்கும் மேற்பட்ட வாலிபர்கள், ஆண்டவருக்கு என்று தங்களை ஒப்புக் கொடுத்தனர். ஆண்டவர் தங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து 20.04.2022 அன்று கித்துள் பகுதியிலே பெண்களுக்கான “ஒன்றுகூடல்” ஒன்றை நடத்துவதற்கு கிருபை கொடுத்தார். இந்த வகையில் கிராமங்களில் இருக்கின்ற பெண்கள் அந்த மாகாநாட்டில் கலந்து கொண்டதோடு, தேவன் தங்கள் வாழ்க்கையில் செய்த மகத்துவமான காரியங்களை சாட்சிகளாக பகிர்ந்துகொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து 22.04.2022 அன்று கிரான் பகுதியில் பெண்களுக்கான மகாநாடு நடைபெற்றது. “எழுந்திரு தெபொராளே”?என்னும் தலைப்பில். இந்த மாகாநாட்டின் கடைசி இறுதிப்பகுதியில், தேவ வசனத்தை பெற்றுக் கொண்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அபிஷேகத்தையும் பெற்றுகொண்டு, தெபோரலைப்போல் எழுந்து நிற்க வேண்டும் என்று தங்களை அர்ப்பணித்தார்கள். அந்த நாளிலே அநேகர் கர்த்தருடைய நாமம் மகிமை படும்படியாய் தங்கள் சாட்ச்சிகளை கூறிக்கொண்டார்கள்.
இந்த ஏப்ரல் மாதம் சுவிற்சர்லாந்து தேசத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, அனைத்து நிகழ்வுகளிலும் கூடஇருந்து நடத்திய சகோதரி. டாலினி ஜீவா அவர்களுக்கும், சகோதரி. சியானி, சகோதரி. சாருயா, சகோதரி. ஜெயந்தினி சண்முகராஜா அவர்களுக்கும், இன்னும் இனைந்து வந்தது ஊழியத்தில் பங்களிப்பு செய்த அனைத்து இணைப்பாளர்கலுக்கும். தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) குடும்பத்தின் சார்பில் நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.
இன்றைய நாளில் 24.04.2022ல் இவர்கள் அனைவரும் சுவிற்சர்லாந்து தேசத்திற்க்கு பயணிக்கிறார்கள், இவர்களுடைய பிரயாணத்திற்காக, நாம் ஜெபித்துக்கொள்வோம். எல்லா துதியும், கனமும், மகிமையும் நம்முடைய ஆண்டவரும் இரட்சகரும் ஆகிய இயேசுகிறிஸ்துவுக்கே உண்டாகட்டும்