GOGM திருகோணமலை சிறைக்கைதிகளின் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது
இலங்கை சிறைச்சாலை ஐக்கியம், திருகோணமலை பிராந்தியத்தினூடாக, கைதிகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் இன்று (11.09.2022) சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் (சகோ.முபாறக், சகோ.சசிகரன்) ஏற்பாட்டில் சிறைக்கைதிகளின் குடும்ப சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது சிறைக்கைதிகளின் 30 குடும்பங்களுக்கு, தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை மிக சிறப்பாக நடாத்துவதற்கு பூரண ஒத்துளைப்பை வழங்கிய தேவ மகிமையின் ஊழியங்களின் (GOGM) அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு: மேலதிகமான படங்கள் எங்களால் எடுக்க முடியாமல் போனது, ஆனால் சிறை அதிகாரிகள் மூலமாக எடுக்கப்பட்ட சில படங்கள்.
வ.சஜிதன்
சி.ரவிந்திரன்
இலங்கை சிறைச்சாலை ஐக்கியம்
கிழக்கு, ஊவா பிராந்திய ஒருங்கிணைப்பாளர்



