GOGM தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) நடாத்தப்பட்ட துதி ஆராதனை ஒன்று கூடல் – 13.03.2025 மட்டக்களப்பு.
தேவ மகிமை ஊழியங்கள் (GOGM) ஸீலோவாம் ஜெபவீடு திருச்சபை, மட்டக்களப்பு, Pastor. J. Kenady அவர்களுடன் இணைந்து 13.03.2025, வியாழக்கிழமையன்று இத் துதி ஆராதனை ஒன்று கூடலானது நடைபெற்றது. “தேவன் தேடும் பொக்கிஷம் நீயா?” எனும் தலைப்பில் இடம்பெற்ற இத் துதி ஆராதனையானது, தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) தலைவர் (இலங்கை), Pastor. Ramesh Selvaraj அவர்களின் குழு தலைமையில், Pastor. J. Kenady அவர்களின் குழுவினருடன் இணைந்து, பிற்பகல் 4.00 தொடக்கம் பிற்பகல் 7.30 மணி வரை இந் நிகழ்வு இடம்பெற்றது.
எமது தேசத்தை கிறிஸ்துவுக்காக வெல்வதற்கு திருச்சபை விசுவாசிகளை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கர்த்தருடைய பணியிலும் விசுவாசிகள் மத்தியில் ஒரு மேன்மையான திருப்புமுனையை ஏற்படுத்த இத் துதி ஆராதனை வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத் துதி ஆராதனையில் மட்டக்களப்பு மாவட்ட திருச்சபை விசுவாசிகள் குடும்பமாய் வருகைதந்து கலந்து கொண்டமையால் இன்னும் கூடுதல் சிறப்பு பெற்றது.
இவ் ஆராதனை நிகழ்வில்: இலங்கை தேசத்தின் எழுப்புதலுக்காகவும், மட்டக்களப்பு மாவட்ட திருச்சபைகளுக்காகவும், சபையின் விசுவாசிகள் குடும்பங்களுக்காகவும் மற்றும் வாலிபர்களின் இரட்சிப்புக்காகவும் ஊக்கமாய் ஜெபித்தார்கள்.
அத்தோடு, தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) ஸ்தாபகரும், தலைவருமான Rev. Jeeva Subramaniam அவர்களுக்கும், இத் துதி ஆராதனையை ஒழுங்கு செய்த Pastor. Ramesh Selvaraj மற்றும் GOGM குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் திருச்சபை விசுவாசிகள் சார்பாக Pastor. J. Kenady அவர்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டதுடன், சர்வதேச ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கும் GOGM ஊழியங்களிற்காகவும் மற்றும் GOGM குழுவினர்களுக்காகவும் விசேஷமாக ஜெபித்தார்கள்.
மேலும், எமது ஸ்தாபனமானது ஆவிக்குரிய ரீதியில் மக்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், துதி ஆராதனை, வாலிபர் மாநாடு, பெண்கள் மாநாடு, சிறுவர்கள் மாநாடு மற்றும் குடும்பமாநாடு போன்ற ஆவிக்குரிய கருத்தரங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற துதி ஆராதனை நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் காணொளிகளும்:












