GOGM தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) நடாத்தப்படும், தேவ மகிமை ஊழியங்களின் வேதாகம கல்லூரி (GOGM BIBLE COLLEGE) – 28.03.2025
Evangelical Church of Christ – Mathagal – Jaffna திருச்சபையில், “மிஷனரி ஊழியம்” எனும் வேத
பாடம், Pastor. Unesh Selvaraj (விரிவுரையாளர்) அவர்களினால் 28.03.2025 அன்று கற்பிக்கப்பட்டது.
இன்றைய நாளில் (28.03.2025) நடைபெற்ற வேதாகம கல்லூரியில் அனேகமான மாணவர்கள் கலந்து தங்களின் வேத அறிவுத் திறனை விருத்தி செய்தார்கள். இது தங்களுடைய ஊழிய பாதைக்கு மிகவும் பிரயோசனமானதாக இருந்தது என்று, அவர்கள் சொல்லும் அறிக்கைகளை நாம் அறியக்கூடியதாக இருந்தது. மேலும், தேவ மகிமை ஊழியங்களின் வேதாகம கல்லூரி, திருச்சபை மக்களின் வேத அறிவை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் வேதாகம கல்லூரி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற பாட நேரத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் காணொளிகளும்.







