மனச்சேனை கிராம பகுதியில் வறுமை கோட்டில் வாழுகின்ற 70 குடும்பத்தினருக்கு உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது
15.08.2022 அன்று மனச்சேனை கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டில் வாழுகின்றதான 70 குடும்பத்தினருக்கு, அவர்களது வாழ்க்கை சிறக்கும்படியாக தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) உலர்உணவு பொதிகள் வழங்கப்பட்டது. இவர்களது அடிப்படை தேவைகள் தொடர்ந்தும் கிடைக்கும் படியாக இவர்களுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வோம். உண்மையிலே மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் இவர்கள். இந்த நாட்களில் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு இறைமகன் எனக்குச் செய்த உதவி அளப்பெரியது என்று, அவர்களுடைய இருதயத்தில் இருந்து அவர்கள் கூறும் வார்த்தைகள் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உணர்வை எனக்கு தந்தது. எல்லா துதி கன மகிமை அனைத்தும் கடவுள் ஒருவருக்கே.