GOGM Haputale பிரதேசத்தில் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
தேவ மகிமை ஊழியங்களும் (GOGM) மற்றும் சர்வதேச சமுதாய வேதபாடக் கல்வி (CBSI) ஊழியங்களும் இணைந்து, கடந்த 18.01.2025 அன்று (சனிக் கிழமை) இலங்கை மத்திய மலையக – Haputale பிரதேசத்தில் உள்ள கல்வி கற்கின்ற 480 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க உதவி செய்த தேவனுக்கும், இவ் உதவிகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் படி, இந் நிகழ்வை திட்டமிட்டு சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்த உதவி செய்த Pastor. T. Rayappan அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பு, தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூக நல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.