GOGM தேவ மகிமை ஊழியங்களினால் (GOGM) நடாத்தப்பட்ட வாலிபர் கருத்தரங்கு 26.02.2025 காயங்கேணி, வாகரை.
தேவ மகிமை ஊழியங்கள் (GOGM) Pastor. M. Sasinthan அவர்களுடன் இணைந்து, ஜீவனுள்ள கிறிஸ்தவ சபை (Living Chris an Assembly) வாகரையில் 26.02.2025, புதன்கிழமையன்று இவ் வாலிபர் கருத்தரங்கு ஒன்று கூடலானது நடைபெற்றது. இக் கருத்தரங்கில் வாகரை பிரதேசத்தில் உள்ள 13 திருச்சபையை சேர்ந்த வாலிபர்கள் அன்றைய தினம் கலந்து கொண்டு நன்மையடைந்திருந்தார்கள்.
எமது தேசத்தை கிறிஸ்துவுக்காக வெல்வதற்கு வாலிபர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாலிபர் மத்தியில் தேவன் பல நன்மைகளையும் அற்புதங்களையும் புதிய மாற்றத்தையும் செய்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இம்முறை எமது தொனிப்பொருளானது “தேவன் தேடும் பொக்கிஷம் நீயா?” என்பதாகும்.
இவ்வாலிபர் கருத்தரங்கில்:
தேவனுக்கேற்ற ஆராதனைகள், தட்டியெழுப்பும் தேவசெய்திகள், மனதுக்கு இனிய பாடல்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் எழுப்புதல் சிறப்பு நிகழ்வுகள், நடைமுறைப் பிரச்சனைகள், கலை நிகழ்ச்சிகள், சிந்திக்க வைக்கும் ஆலோசனைகள், புத்துணுர்வூட்டும் விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், வாலிபர்களின் தனியாள் ஆத்தும ஆதாயத்தில் ஆளுமையை மேம்படுத்தும்
திட்டங்கள் போன்றவைகள் இங்கே இடம்பெற்றன. இந் நிகழ்வானது தங்களுடைய ஜீவிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோசனமானதாக இருந்தது என்று, அவர்கள் கூறிய சாட்சிகளில் நாம் அறியக்கூடியதாக இருந்தது.
அத்தோடு, தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) ஸ்தாபகரும், தலைவருமான Rev. Jeeva Subramaniam அவர்களுக்கும், இவ் வாலிபர் கருத்தரங்கை ஒழுங்கு செய்த Pastor. Ramesh Selvaraj மற்றும் GOGM குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகரை திருச்சபை போதகர்கள் மற்றும் வாலிபர்கள் சார்பாக Pastor. M. Sasinthan அவர்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டதுடன், இலங்கை தேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் GOGM தேவ மகிமை ஊழியங்களிற்காகவும் விசேஷமாக ஜெபித்தார்கள்.
மேலும், தேவ மகிமை ஊழியங்கள் இலங்கையின் பல பிரதேசங்களில் வாலிபர் மாநாடு, பெண்கள் மாநாடு, சிறுவர்கள் மாநாடு மற்றும் குடும்ப மாநாடு, ஊழியர்கள் மாநாடு, துதி ஆராதனை போன்ற ஆவிக்குரிய கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது ஸ்தாபனமானது, ஆவிக்குரிய ரீதியில் மக்களை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் இத் திட்டங்களை
மேற்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அன்று நடைபெற்ற வாலிபர் கருத்தரங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் காணொளிகளும்…



















