GOGM தேவ மகிமை ஊழியங்களினால் நடாத்தப்பட்ட துதி ஆராதனை ஒன்று கூடல் – 31.01.2025
தேவ மகிமை ஊழியங்கள் (GOGM) மற்றும் அம்பாறை மாவட்ட போதகர் ஐக்கியமும் இணைந்து நடாத்தப்பட்ட துதி ஆராதனையானது, Assembly of God – அக்கரைப்பற்று திருச்சபையில் இன்று, (31.01.2025, வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை தேசத்தின் எழுப்புதலுக்காகவும் அம்பாறை மாவட்ட போதகர் ஐக்கியத்திற்காகவும்; GOGM தேவ மகிமை ஊழியங்களிற்காகவும் விசேஷமாக ஜெபித்தார்கள். இவ் தேவ மகிமை துதி ஆராதனை ஒன்று கூடலில், எதிர்பார்த்ததைவிட, விசேஷமாக அம்பாறை மாவட்ட திருச்சபை விசுவாசிகள் (250க்கும் அதிகமான விசுவாசிகள்) குடும்பமாய் வருகைதந்து கலந்து கொண்டமை இன்னும் சிறப்பு பெற்றது.
மேலும், தேவ மகிமை ஊழியங்கள் இலங்கையின் பல பிரதேசங்களில் துதி ஆராதனை, வாலிபர் மாநாடு, பெண்கள் மாநாடு, சிறுவர்கள் மாநாடு மற்றும் குடும்பமாநாடு போன்ற ஆவிக்குரிய கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது ஸ்தாபனமானது ஆவிக்குரிய ரீதியில் மக்களை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ரீதியில் GOGM தேவ மகிமை ஊழியங்கள் இத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற கருத்தரங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் காணொளிகளும்.
















