GOGM சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா – 23.11.2024
சர்வதேச தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்களின் அமைப்பினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு வழங்கும் வைபவம் கடந்த 23.11.2024 (சனிக்கிழமை) கல்முனை, திரு இருதயநாதர் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
மங்கள வாத்திய இசை முழங்க, அதிதிகள் அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து, பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. இப்பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான மாண்புமிகு திரு ஜீவா சுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததுடன், பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பினால், இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஆரிப் பயிற்சி, வர்ண கேக் பயிற்சி, சமையல் கலை பயிற்சி, தையல் பயிற்சி, கணினி வகுப்பு, கையடக்க தொலைபேசி திருத்துனர் பயிற்சி, ஆங்கில வகுப்பு, வாத்திய இசைக் கருவி பயிற்சி மற்றும் பிரயோக வகுப்புகள் போன்ற கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சி மற்றும் கற்கை நெறிகளை நிறைவு செய்த 172 இளைஞர் யுவதிகளுக்கான பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் மாண்புமிகு திரு ஜீவா சுப்ரமணியம் அவர்களால் 23.11.2024 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பு, தேசிய ரீதியில் நலிவுற்ற மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி வளப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூக நல உதவி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.