தேவ மகிமை ஊழியங்களினால் கல்முனை பிரதேசத்தில் நடாத்தப்பட்ட அழகு கலை பயிற்சி
தேவ மகிமை உழியங்களினால் (GOGM)இன்றைய நாளில் அழகு கலை பயிற்சியானது கல்முனை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு கூட, ஆசிரியர் யூலி அவர்களோடு கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது. கலந்துரையாடலில் ஒவ்வொரு வியாழக்கிழமை பிற்பகலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும் இப்பாடத்திட்டங்கள் நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இப்பாடத்திட்டமானது நான்கு மாதங்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு, ஆரம்ப அழகுக்கலை நிறைவு செய்யப்படும் என்பதையும் மாணவர்களோடு கலந்துரையாடல் செய்யப்பட்டது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.